பென்னாகரம் அருகே அளேபுரம் லட்சுமிநரசிம்ம சாமி கோவில் தேரோட்டம்

பென்னாகரம் அருகே அளேபுரம் லட்சுமிநரசிம்ம சாமி கோவில் தேரோட்டம் நடந்தது.

Update: 2022-06-14 16:39 GMT

பென்னாகரம்:

பென்னாகரம் அருகே அளேபுரத்தில் லட்சுமிநரசிம்ம சாமி கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த கோவில் தேர்த்திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி சிறப்பு பூஜை, வழிபாடு அலங்காரம், சாமிக்கு திருக்கல்யாணம்,, கருட உற்வசம் ஆகியவை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நேற்று நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில்லட்சுமி நரசிம்மர் எழுந்தருளினார். இதையடுத்து அங்கு திரண்டு இருந்த பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். விழாவில் ஜி.கே.மணி எம்.எல்.ஏ. தர்மபுரி மாவட்ட ஆவின் தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ. நஞ்சப்பன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்