கோவில் பூசாரி தூக்கு போட்டு தற்கொலை

ஓட்டப்பிடாரத்தில் கோவில் பூசாரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-02-12 18:45 GMT

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த சின்ன உமையன் (வயது 87). இவர் உலகாண்ட ஈஸ்வரி அம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார். இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதில் மனமுடைந்து காணப்பட்ட அவர் வீட்டில் வேஷ்டியால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஓட்டப்பிடராம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன், சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்