கோவில் கொடை விழா
உடன்குடி தேவி நாகமுத்து மாரியம்மன் கோவில் கொடை விழா நடந்தது.
உடன்குடி:
உடன்குடி தேவி நாகமுத்து மாரியம்மன் கோவில் கொடை விழா 2 நாட்கள் நடந்தது. முதல் நாள் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. பின்னர் நாகமுத்து மாரியம்மன், நாகராஜா மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது. 2-ம்நாள் உடன்குடி வட்டார பகுதியில் உள்ள அனைத்து குளங்கள், குட்டைகள், முழுமையாக நிரம்ப வேண்டியும், விவசாய நிலங்களை பாதுகாக்கவும், விவசாயம் செழிக்க வேண்டியும 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.