கோஷ்டி பூசலால் பூட்டப்பட்ட கோவில்... போலீசார், அதிரடிப்படை குவிப்பு - திருப்பத்தூரில் பரபரப்பு
திருவிழாவில் ஏற்பட்ட கோஷ்டி தகராறு காரணமாக கோவில் கதவுகள் பூட்டப்பட்ட சம்பவம் ஆம்பூர் அருகே அரங்கேறியுள்ளது.;
திருப்பத்தூர்,
திருவிழாவில் ஏற்பட்ட கோஷ்டி தகராறு காரணமாக கோவில் கதவுகள் பூட்டப்பட்ட சம்பவம் ஆம்பூர் அருகே அரங்கேறியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கீழ்மிட்டாளம் அம்மன் கோவில் வளாகம் அருகே கழிவறை கட்டுவது தொடர்பாக கோவில் நிர்வாகம் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிலருக்கும் பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இரண்டு நாட்களாக திருவிழா நடந்து வந்த நிலையில், பிரச்சினைக்கு உரிய நபர்கள் குடும்பத்தினருடன் வழிபாடு மேற்கொள்ள வந்துள்ளனர். இதனை அறிந்த கோவில் நிர்வாகத்தினர் முன்கூட்டியே கோவில் கேட்டை பூட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய சமரச பேச்சு வாத்தையில் கைகலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அதிரடிப்படை காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு பொதுமக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். பின்னர் காவல்துறை மற்றும் வருவாய்த்துறை முன்னிலையில் பூட்டப்பட்ட கோவிலின் பூட்டை உடைத்து மற்றொரு தரப்பினர் வழிபாடு மேற்கொண்டனர்.