கோவில் நில அபகரிப்பு வழக்கு; சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை - ஐகோர்ட்டில் புதுச்சேரி அரசு உறுதி

குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட எவரையும் விட்டுவிடப்போவதில்லை என புதுச்சேரி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Update: 2023-09-26 16:06 GMT

சென்னை,

புதுச்சேரியில் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்பிலான 64 ஆயிரம் சதுர அடி நிலம், போலி பத்திரங்கள் மூலம் தனியார் நிறுவனத்திடம் விற்கப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் கோவில் நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.எல்.ஏ. ஜான்குமார் மீதான நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இதன்படி புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் ஐகோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபணமானால் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட எவரையும் விட்டுவிடப்போவதில்லை என புதுச்சேரி அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை தொடர உத்தரவிட்டார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்