கைலாச விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
கைலாச விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.;
காரைக்குடி
காரைக்குடி அருகே புதுவயல் அடுத்த சின்ன வேங்காவயல், வலயன்வயல் கிராமத்தில் கைலாச விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 1864-ம் ஆண்டு கட்டப்பட்டு கடைசியாக கடந்த 1897-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிலையில் சுமார் 126 ஆண்டுகளுக்கு பின்னர் இக்கோவில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
கண்டனூர் வேங்காவயலார் வீடு அ.சுப.பழ. அழகப்ப செட்டியார் குடும்பத்தினர் மற்றும் அழ.மணிகண்டன் செட்டியார் ஆகியோரால் இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு தற்போது கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக 4 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று அதன்பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது. 126 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றதால் விழாவில் புதுவயல், சின்னவேங்காவயல், வலயன்வயல், கண்டனூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.