கோவில் குடமுழுக்கு

கத்தரிப்புலம் பனையடிகுத்தகை மகா காலபைரவர் கோவில் குடமுழுக்கு நடந்தது.;

Update: 2023-09-21 18:45 GMT

வேதாரண்யத்தை அடுத்த கத்தரிப்புலம் கிராமம் பனையடிகுத்தகை பகுதியில் மகா காலபைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று குடமுழுக்கு நடந்தது. விழாவையொட்டி நேற்றுமுன்தினம் அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை நடந்தது. நேற்று காலை பரிவார தெய்வங்களுக்கு பூஜையும், பின்னர் கடங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு விமானம், ராஜகோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. மாலை சொர்ணபைரவருக்கும், பைரவிக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்