கோவில் குடமுழுக்கு

மன்னார்குடி கற்பக விநாயகர் கோவில் குடமுழுக்கில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-09-10 18:45 GMT

மன்னார்குடி நடராஜ பிள்ளை தெரு ருக்குமணி குளம் மேல்கரையில் கற்பக விநாயகருக்கு புதிய கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டு திருப்பணி குழு அமைக்கப்பட்டது. இந்த பணிகள் நிறைவடைந்து குடமுழுக்கு செய்ய தீர்மானிக்கப்பட்டது. குடமுழுக்கு பணிகள் விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜைகள், இரண்டாம் கால யாகசாலை பூஜை ஆகியவை நடந்தது. நேற்று நான்காம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை நடைபெற்றது. இதையடுத்து வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்று, கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. பின்னர் கற்பக விநாயகருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்