சித்தரேவு மீனாட்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

சித்தரேவு மீனாட்சியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.;

Update: 2023-06-28 21:00 GMT

பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவுவில் மீனாட்சியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. அப்போது மங்கள இசை, விநாயகர் ஹோமம், வாஸ்து சாந்தி, முளைப்பாரி தீர்த்தம் அழைத்து வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. இந்தநிலையில் நேற்று 2-ம் கால யாகசாலை பூஜையும், வருண பூஜை, கோ பூஜை, நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட 7 விதமான ஹோமங்களும், பூர்ணாகுதி, வேதபாராயணம், சதுர்வேதம், தீபாராதனை நடைபெற்றது.

அதன்பிறகு பல்வேறு புண்ணிய தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனிதநீர் அடங்கிய குடங்கள் கோவில் கோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சியம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்