புத்தாண்டு சிறப்பு வழிபாடு

சாத்தனூர், காளகஸ்தீஸ்வரர் கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடந்தது

Update: 2023-01-01 18:45 GMT

கூத்தாநல்லூர்;

கூத்தாநல்லூர் அருகே, பழையனூரில், சாத்தனூர் காளகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், சாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி, வில்வபொடி வாசனை திரவியங்களால் அபிசேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. இதைப்போல வேளுக்குடி ருத்ரகோடீஸ்வரர் கோவில், அச்சம் தீர்த்த விநாயகர் கோவில், வடபாதிமங்கலம் புனவாசல் மழுப்பெருத்த விநாயகர் கோவில், வடகட்டளை அழகு மாரியம்மன் கோவில், அரிச்சந்திரபுரம் அங்காள பரமேஸ்வரி கோவில், லெட்சுமாங்குடி கலிதீர்த்த ராஜவிநாயகர் கோவில், வடபாதிமங்கலம் அருணாச்சலேஸ்வரர் கோவில் மற்றும் கூத்தாநல்லூர் பகுதிகளில் உள்ள கோவில்களிலும் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்