அரசாப விமோசன பெருமாள் கோவிலில் அன்னக்கூட உற்சவம்
கண்டியூர் அரசாப விமோசன பெருமாள் கோவிலில் அன்னக்கூட உற்சவம் நடந்தது.
திருவையாறு;
கண்டியூர் அரசாப விமோசன பெருமாள் கோவிலில் ஆடி மாத திருவோணத்தை முன்னிட்டு அன்னக்கூட உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி புளியோதரை, கதம்ப சாதம், தயிர்சாதம், வடை, லட்டு, முருக்கு உள்ளிட்ட 10 வகை அன்னபட்சனங்கள் செய்து பெருமாளுக்கு அர்பணித்து மழை அதிகமாக பொழிய வேண்டும், உலகில் உள்ள அனைவருக்கும் அன்னம் தடையின்றி கிடைக்க வேண்டும், நோய் நொடியின்றி வாழவேண்டும், அனைவரும் செல்வ செழிப்போடு வாழவேண்டும் என வேண்டி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.