திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி உற்சவம்

திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி உற்சவம் நடந்தது.

Update: 2023-08-22 18:30 GMT

கும்பகோணம் சாரங்கபாணி கீழ வீதியில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி உற்சவம்காளியம்மன் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு தீமிதி உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று (புதன்கிழமை) காளியம்மன் திருநடன வீதி உலா நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்