தேவூர் அருகே ஒடசக்கரை சமயபுரத்து மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்
தேவூர் அருகே ஒடசக்கரை சமயபுரத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்
தேவூர்
தேவூர் அருகே ஒடசக்கரை சமயபுரத்து மாரியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினமும் சிறப்பு வழிபாடு, பூஜை, அம்மன் அலங்காரம், கோவில் சன்னதியில் பெண்கள் தண்ணீர் ஊற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நிகழ்வாக திரளான பக்தர்கள் கல்வடங்கம் காவிரி ஆற்றில் புனித நீராடி, அம்மன் அலங்காரம் செய்து தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். ஊர்வலம் கல்வடங்கம் அங்காளம்மன் கோவிலில் தொடங்கி கொட்டாயூர், வட்ராம்பாளையம் வழியாக செட்டிபட்டி நாடார் தெரு மாரியம்மன் கோவில் சன்னதி வந்தடைந்தது. அங்கிருந்து ஒடசக்கரை சமயபுரத்து மாரியம்மன் கோவிலுக்கு தீர்த்த குடம் எடுத்து வந்து பக்தர்கள் அம்மன் தாலாட்டு பாடல் பாடினா். பின்னர் தீ சட்டி எடுத்தல், சாட்டை அடித்தல் நடந்தது.
தொடர்ந்து பஞ்சாயத்து ரோடு பகுதியில் இருந்து அம்மன் அழைத்து வருதல், அம்மன் சிறப்பு அலங்காரம், பெண்கள் பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், ஒடசக்கரை சாமி கிணற்றில் இருந்து பக்தாக்ள் பல்வேறு அலுகு குத்தி வழிபாடு செய்தனர். இன்று (புதன்கிழமை) மஞ்சள் நீராட்டத்துடன் விழா முடிவடைகிறது. ஏற்பாடுகளை ஒடசக்கரை நாடார் சமுதாய மக்கள், இளைஞர்கள் பெண்கள் திரளானோர் செய்திருந்தனர்.