மகா மாரியம்மன் கோவில் திருவிழா

மகா மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.;

Update: 2023-04-24 19:00 GMT

பாபநாசம் அருகே கோவில் தேவராயன்பேட்டை கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. அது சமயம் காலையில் தப்பாட்ட கலை நிகழ்ச்சிகளுடன் குடமுருட்டி ஆற்றங்கரையிலிருந்து திரளான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அதைத்தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலையில் அம்மன் வீதி உலா காட்சி நடைபெற்றது. இரவு வாண வேடிக்கை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்