சவுடாம்பிகை அம்மன் கோவில் விழா

சவுடாம்பிகை அம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா நடைபெற்றது.;

Update:2023-04-14 00:15 IST

காரைக்குடி

காரைக்குடி பகுதியில் ஸ்ரீராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த 4-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் 9-ம் நாளான நேற்று முத்தாளம்மன் கோவிலிலிருந்து சக்தி நீர் எடுத்து சென்று கோவிலில் ரதி சேர்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக முத்தாளம்மன் கோவில் குளக்கரையில் சக்தி நீருக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறுவர்கள், இளைஞர்கள் இரு கைகளில் வைத்திருந்த கத்தி கொண்டு உடலில் கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து முத்தாளம்மன் கோவிலிலிருந்து சக்திநீர், கரகம் மேள தாளத்துடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அம்மன் கோவிலை வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்