திண்டுக்கல்லில் உள்ள முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம்

திண்டுக்கல்லில் உள்ள முருகன் கோவில்களில் கந்தசஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹாரம் நடைபெற்றது.

Update: 2022-10-30 16:29 GMT

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்புடன் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த வருட கந்தசஷ்டி விழா நடைபெற்று வருகிறது. இதில் இன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி காலையில் வள்ளி-தெய்வானை, சண்முகநாதன் மற்றும் ஞான தண்டபாணிக்கு பால், பழம், பன்னீர் உள்பட 32 வகையான பொருட்களால் மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து மாலை 5 மணியளவில் சுப்பிரமணிய சுவாமி மற்றும் வீரபாகுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதில் அஜமுகன், அக்னிமுகன், தாரகாசூரன், சிங்கமுகசூரன் உள்ளிட்ட அசுரர்களை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றன. விழாவில் (திங்கட்கிழமை) மாலையில் வள்ளி-தெய்வானை சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.

இதேபோல் திண்டுக்கல் ஒய்.எம்.ஆர். பட்டி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற கந்தசஷ்டி விழாவில் நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்று சூரனை வதம் செய்யும் நிகழ்வுகள் நடைபெற்றன. மேலும் திண்டுக்கல் என்.ஜி. ஓ. காலனி முருகன் கோவில், ஆர்.வி.நகர் கந்தகோட்டம் முருகன் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சூரசம்ஹாரத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்