பென்னாகரம் அருகே தர்மராஜா-திரவுபதி அம்மன் கோவில் திருவிழா
பென்னாகரம் அருகே தர்மராஜா-திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடியில் திரவுபதி அம்மன், கோவில் உள்ளது. இந்த கோவில் திரவுபதி, தர்மர், பீமன், அர்ஜூன்ன், நகுலன், சகாதேவன் உள்ளிட்ட 17 கடவுள்களின் சிலைகள் வைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.
இந்த கோவிலில் 7 கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர். கோவிலின் கும்பாபிஷேக விழா நடைபெற்று 48 நாள் முடிவடைந்த நிலையில் நேற்று, தீமிதி விழா மற்றும் தேர்த்திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக காவிரி ஆற்றில் புனித நீர் கொண்டு வந்து தர்மராஜா-திரவுபதி அம்மன் உள்ளிட்ட சாமி சிலைகளுக்கு பூஜைகள் செய்யப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை 7 கிராமமக்கள் மற்றும் கவுண்டர்கள் செய்திருந்தனர்.