லளிகத்தில்குறிஞ்சி மாரியம்மன் கோவில் திருவிழாமாவிளக்கு எடுத்து பக்தர்கள் வழிபாடு

Update: 2023-08-10 19:45 GMT

நல்லம்பள்ளி

நல்லம்பள்ளி அருகே லளிகம் கிராமத்தில் குறிஞ்சி மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 7-ந் தேதி பொன்னியம்மன் கோவிலுக்கு கரகம் எடுத்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தொடர்ந்து பால்குட ஊர்வலம் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. 8-ந் தேதி அம்மன் ஊர்வலம், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் பக்தர்கள் மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. நேற்று மஞ்சள் நீராட்டுதல், எருதாட்ட நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்