வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா ஏற்பாடுகள் தீவிரம்

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.;

Update: 2022-12-30 18:45 GMT

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சொர்க்கவாசல் திறப்பு விழா

வைணவ கோவில்களில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு விழா விமரிசயைாக நடைபெறுவது வழக்கம். புகழ்பெற்ற வைணவ கோவில்களில் ஒன்றான மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் தற்போது வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம் நடந்து வருகிறது.

இதன் முக்கிய விழாவான சொர்க்கவாசல் திறப்பு விழா வருகிற 2-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவம் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. தொடர்ந்து விழா வருகிற 12-ந் தேதி வரை நடைபெறுகிறது.

ஏற்பாடுகள்

வைகுண்ட ஏகாதசி விழாவில் முதல் 10 நாள் நாட்கள் பகல் பத்து உற்சவம் கொண்டாடப்பட்டு பெருமாள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார். அதே போல அடுத்த 10 நாள் ராப்பத்து உற்சவம் நடக்கிறது.

வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழாவுக்காக ராஜகோபாலசாமி கோவிலில் உள்ள சொர்க்கவாசல் மண்டபத்தில் வர்ணம் பூசுதல், வெளிப்புறம் பந்தல் அமைத்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

விழா ஏற்பாடுகள் கோவில் செயல் அலுவலர் மாதவன் தலைமையில் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்கள் சிரமமின்றி செவ்வதற்கு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்