முருகன் கோவிலில் திருவிளக்கு பூஜை
முருகன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
நீடாமங்கலம் கீழத்தெரு முருகன் கோவிலில் சுமங்கலி திருவிளக்கு பூஜை மற்றும் அய்யப்பசாமி பூஜை நடந்தது. இதனை முன்னிட்டு வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களை கூறி சுமங்கலி திருவிளக்கு பூஜையை நடத்தி வைத்தனர். இதையொட்டி பஜனை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர்.