கெங்கையம்மன் கோவில் குடமுழுக்கு

கெங்கையம்மன் கோவிலில் குடமுழுக்கு நடந்தது.

Update: 2022-07-06 17:47 GMT

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோவங்குடி கிராமத்தில் பழமை வாய்ந்த கெங்கையம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் குடமுழுக்கு விழாவானது நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. நேற்று யாகசாலை பூஜைகள் முடிவடைந்த பின்னர் கோவில் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா குடமுழுக்கு நடந்தது. இதே போல சித்தி விநாயகர், செல்லியம்மன், அய்யனார் கோவில் குடமுழுக்கு விழாவும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவங்குடி கிராம மக்கள், கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். குடமுழுக்கு விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்