சுந்தரகாளியம்மன் கோவிலில் திருநடன திருவிழா

சுந்தரகாளியம்மன் கோவிலில் திருநடன திருவிழா நடந்தது.;

Update: 2022-06-08 17:51 GMT

கபிஸ்தலம்:-

கபிஸ்தலம் தெற்கு முதலியார் தெருவில் உள்ள சுந்தர காளியம்மன் கோவிலில் திருநடன திருவிழா நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த மாதம் 26-ந் தேதி பந்தக்கால் நடும் நிகழ்ச்சியும், 30-ந்தேதி முதல் காப்பு கட்டுதல் மற்றும் சக்தி கரகம் புறப்பாடும் நடந்தது. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. விழாவையொட்டி அன்ன வாகனத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து பச்சைக்காளி மற்றும் பவளக்காளி அம்மன் படுகளம் பார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் வருகிற 12-ந்தேதி பால் காவடி, 14-ந் தேதி விடையாற்றி விழா நடக்கிறது. 

Tags:    

மேலும் செய்திகள்