மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம்
அய்யம்பேட்டை அருகே மணலூர் மகாமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
அய்யம்பேட்டை அருகே மணலூர் மகாமாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
மகாமாரியம்மன் கோவில்
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே மணலூரில் பிரசித்திப்பெற்ற மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் பிரம்மோற்சவ விழா கடந்த 7-ந் தேதி அய்யனாருக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
தொடர்ந்து தினந்தோறும் இரவு அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அம்பாள் குதிரை வாகனத்திலும், இரவு புஷ்ப பல்லக்கிலும் வீதியுலா காட்சி நடைபெற்றது.
தேரோட்டம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அலங்கரிக்கப்பட்ட தேரில் மகாமாரியம்மன் எழுந்தருளினார். பின்னர் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதைத்தொடர்ந்து மாலை செடில் திருவிழாவும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் ஹாசினி, ஆய்வாளர் குணசுந்தரி, ஊராட்சி தலைவர் பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் ஜீவிதா ராஜசேகர், கணக்கர் முருகுபாண்டியன் மற்றும் கிராம நாட்டாமைகள், கிராம மக்கள் செய்திருந்தனர்.