சர்வசக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம்

சர்வசக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.

Update: 2022-06-07 17:33 GMT

கபிஸ்தலம்:-

கபிஸ்தலம் அருகே உள்ள துரும்பூர் சர்வசக்தி மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. இதையொட்டி பக்தர்கள் அலகு காவடி, கரகம் எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து துரும்பூர், பாதிரிமேடு உள்ளிட்ட பகுதிகள் வழியாக தேர் வலம் வந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். விழா ஏற்பாடுகளை நாட்டாமைகள், கிராமவாசிகள் மற்றும் விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்