மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி கடைவீதி பகுதியில் உள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் வாசவி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்றது. மேலும் விநாயகர், முருகன் மற்றும் நவக்கிரக விக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி வாசவி கன்னிகா பரமேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் மாலை வாசவி கன்னிகா பரமேஸ்வரி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், மலர் அலங்காரத்தில் வீதிஉலா சென்றார். பக்தர்கள் பழம், பூ, தேங்காய் படைத்து சாமி தரிசனம் செய்தனர்.