தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டை தாலுகா கூச்சுவாடி, நெல்லுகுந்தி கிராமங்களுக்கு அருகே அடர்ந்த வனப்பகுதியில் மேலகிரி அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை விஷூவையொட்டி கோவில் குருசாமி கோபால் தலைமையில் சாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. இதில் நெல்லுகுந்தி, கூச்சுவாடி, கோவை குட்டை, குடியூர் பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.