மோகனூர்:
மோகனூர் ஒன்றியம் ஆரியூரில் பிரசித்தி பெற்ற முத்துசாமி கோவில் உள்ளது. கொங்கு வேளாளர் சமூக மணியன் குலம், கண்ணந்தை குல குடிபாட்டு மக்களுக்கு பாத்தியப்பட்ட இந்த கோவிலில் கணபதி, சப்தகன்னிமார், கருப்பண்ணசாமி சாமிகளுக்கு சன்னதிகள் உள்ளன. இங்குள்ள ஆலமரத்தின் கீழ் சங்கம் புதரில் உருவான முத்துசாமி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கோவிலில் 20 ஆண்டுகளுக்கு பின் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. திருப்பணி முடிந்ததை தொடர்ந்து ஜனவரி மாதம் 26-ந் தேதி கும்பாபிேஷகம் நடைபெற்றது.
இதை தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. தினமும் காலை 10 மணிக்கு பால், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சாமிக்கு அபிேஷகம் செய்யப்படுகிறது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இந்த நிலையில் முத்துசாமிக்கு புதிதாக தங்ககவசம் அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதற்காக சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சாமிக்கு தங்ககவசம் அணிவிக்கப்பட்டது. இதில் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்கு மகா கணபதி வழிபாடு, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மறுநாள் (புதன்கிழமை) மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற உள்ளது. அன்று காலை 9 மணிக்கு சங்கல்பம், மண்டப பூஜை, அத்தியாய தேவதைகள் ேஹாமம், சுமங்கலி பூஜை, மூலஸ்தானம், அபிேஷகம், மகா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.