சேந்தமங்கலத்தில்பெருமாள் கோவில் தேரோட்டம்எம்.எல்.ஏ.க்கள் பொன்னுசாமி, ராமலிங்கம் தொடங்கி வைத்தனர்

Update:2023-03-07 00:30 IST

சேந்தமங்கலம்:

சேந்தமங்கலம் பழைய பஸ் நிலையம் அருகே வரலாற்று பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாசி மக தேரோட்டம் கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினந்தோறும் ஒவ்வொரு வாகனத்தில் பெருமாளின் திருவீதி உலா நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிலையில் நேற்று முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நடந்தது. முன்னதாக தேர்நிலையில் இருந்து பெரிய தேரை சட்டமன்ற உறுப்பினர்கள் சேந்தமங்கலம் பொன்னுசாமி, நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் ஒன்றிய அட்மாகுழு சேர்மன் அசோக்குமார், மின்னாம்பள்ளி நடேசன், பேரூர் செயலாளர் தனபாலன், துணை செயலாளர் கிருஷ்ணகுமார், பேரூராட்சி துணைத்தலைவர் ரகு, டாக்டர் பாலாஜி, கோவில் நிர்வாக அதிகாரி மணிகண்டன், பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் சாய் பாலமுருகன் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் அந்த தேரை பழைய பஸ் நிலையம் வழியாக சேடர் தெரு, மார்க்கெட், மெயின் ரோடு வழியாக இழுத்து சென்றனர். விழாவில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி அளவில் சோமேஸ்வரரின் சின்ன தேரோட்ட நிகழ்ச்சி நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்