ராமசாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்

புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையை யொட்டி பொங்கலூர் அருகே கோவில்பாளையத்தில் உள்ள ராமசாமி கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-10-08 22:20 GMT

புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையை யொட்டி பொங்கலூர் அருகே கோவில்பாளையத்தில் உள்ள ராமசாமி கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

ராமசாமி கோவில்

பொங்கலூர் அருகே கோவில்பாளையத்தில் 500 ஆண்டுகளுக்கு பழமை வாய்ந்த ராமசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் உள்ள இடத்தில் ராமபிரான், லட்சுமணன் குடில் அமைத்து தங்கியிருந்ததாக ஐதீகம். புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் இந்த கோவிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்தால் நினைத்த காரியம் ைககூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இதனால் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். குறிப்பாக கோவை, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் இருந்து அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருவார்கள். நேற்று புரட்டாசி 3-வது சனிக்கிழமை என்பதால் கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதற்காக கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிக பஸ் நிறுத்தம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பக்தர்கள் கூட்டம்

இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக குடிநீர், மருத்துவ குழு, தீயணைப்புத்துறை வசதி ஆகிய சிறப்பான ஏற்பாடுகள் பரம்பரை அறங்காவலர்கள் குழு தலைவர் பி.எம்.கிருஷ்ணகுமார் தலைமையில் செய்யப்பட்டிருந்தது.

மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்த பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்டு சவுமியா தலைமையில், அவினாசிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்