பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த இருளப்பட்டியில் உள்ள ஸ்ரீ காணியம்மன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தா்கள் அங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். உண்டியல் காணிக்கை திருவிழாவிற்கு பிறகு ஊர் கவுண்டர்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு எண்ணப்படும். இந்த நிலையில் கடந்த மாதம் தேர்த்திருவிழா நடந்து முடிந்தது. இதனை தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல் அலுவலர் பிரபு தலைமையில் இருளப்பட்டி ஊராட்சி தலைவர் குமார், முன்னாள் சேர்மன் சின்னப்ப கவுண்டர், துணைத்தலைவர் ராஜேந்திரன் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. இந்த பணியில் கோவில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்டோா் ஈடுபட்டனா். அதன்படி உண்டியலில் ரூ.2 லட்சத்து 2 ஆயிரத்து 709 காணிக்கையாக இருந்தது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.