தான்தோன்றீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு
ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது.;
திருக்கடையூர்:
திருக்கடையூர் அருகே தான்தோன்றீஸ்வரர் கோவில் உள்ளது.இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி வாள் நெடுங்கண்ணி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி தான் தோன்றீஸ்வரர், வாள் ெநடுங்கண்ணி அம்மன், சிறப்புலி நாயனார் உள்ளிட்ட சாமிகளுக்கு பால், தேன், இளநீர், பன்னீர், மஞ்சள் பொடி, திரவிய பொடி, பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.