அனுமதி இன்றி துப்பாக்கி வைத்திருந்த வடமாநில வாலிபர்கள் கைது

வெப்படை அருகே அனுமதி இன்றி துப்பாக்கி வைத்திருந்த வடமாநில வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2023-01-26 19:34 GMT

பள்ளிபாளையம்

வெப்படை அருகே வாழ்ராசா பாளையத்தில் வட மாநில வாலிபர்கள் துப்பாக்கி வைத்திருப்பதாக வெப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று விசாரணை செய்தனர். அங்கு பீகாரை சேர்ந்த மணிஸ் குமார் (வயது26), ஜார்கண்டை சேர்ந்த சாகர் பாஷ்வா (19) ஆகிய இருவரும் ஒரு வீட்டில் தங்கி இருந்தது தெரியவந்தது. அவர்கள் வீட்டை சோதனை செய்தபோது ஒரு கை துப்பாக்கியும், எட்டு தோட்டாக்களும் இருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கைது செய்த போலீசாா் கோர்ட்டில் ஆஜர்படித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்