ஸ்ரீவில்லிபுத்தூர்,
சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கல் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 36). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர்-சிவகாசி ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது மல்லி அருகே வந்த போது எதிரே வந்த மினி வேன்- மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த முத்துக்குமாரை அக்கம், பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.