அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியானார்.;

Update: 2023-08-07 18:45 GMT

வந்தவாசி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியானார்.

சேத்துப்பட்டு தாலுகா செவரம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் தேனப்பன் (வயது 27). இவர் சென்னையில் கட்டுமான நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

செவரம்பூண்டிக்கு வந்த அவர் நேற்று மோட்டார்சைக்கிளில் சென்னைக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். வந்தவாசியை அடுத்த பொன்னூர் மலை அடிவாரம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.இதில் சம்பவ இடத்திலேயே தேனப்பன் பலியானார். சம்பவ இடத்துக்குச் சென்ற வந்தவாசி வடக்கு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நிற்காமல் சென்ற வாகனத்தையும் டிரைவரையும் ேதடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்