சென்னையில் வாலிபர் கொலை:4 பேர் தூத்துக்குடி கோர்ட்டில் சரண்
சென்னையில் வாலிபர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 4 பேர் தூத்துக்குடி கோர்ட்டில் சரணடைந்தனர்.
சென்னை போரூரில் நடந்த வாலிபர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த 4 பேர் தூத்துக்குடி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
கொலை வழக்கு
சென்னை போரூரில் வினோத் (வயது 25) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
தூத்துக்குடி கோர்ட்டில் சரண்
இந்தநிலையில் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த காஞ்சிபுரம் அன்னை இந்திரா நகரைச் சேர்ந்த முத்துக்குமார் மகன் அஜித்குமார் (23), நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியைச் சேர்ந்த முருகன் மகன் நவீன்குமார் (25), சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசக நகரைச் சேர்ந்த விஜயகுமார் மகன் யுவின்குமார் (28) மற்றும் சென்னை காந்தி நகரைச் சேர்ந்த பெருமாள் மகன் மணிகண்டன் (25) ஆகிய 4 பேர் தூத்துக்குடி 3-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
இவர்களை மாஜிஸ்திரேட்டு சேரலாதன் 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் அவர்கள் 4 பேரையும் தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.