கொட்டாம்பட்டி அருகே கார் மோதி வாலிபர் பலி

கொட்டாம்பட்டி அருகே கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.

Update: 2023-10-06 20:15 GMT

கொட்டாம்பட்டி,

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள புன்னப்பட்டியை சேர்ந்தவர் நல்லமணி. இவருடைய மகன்கள் முத்துப்பாண்டி(வயது 17), முத்துச்செல்வம். இவர்கள் இருவரும் கொட்டாம்பட்டி அருகே உள்ள பரமநாதபுரத்தில் உள்ள தாய்மாமன் மணிவேல் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் முத்துப்பாண்டி அவருடைய தம்பி முத்துச்செல்வம் இருவரும் கருங்காலக்குடிக்கு மோட்டார் சைக்கிளில் பரமநாதபுரம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு இருவரும் படுகாயமடைந்தனர். இதில் மதுரை அரசு மருத்துவமனையில் முத்துப்பாண்டி சேர்க்கபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்