சாத்தூர்,
சாத்தூர் தாலுகா கே.முத்துசாமிபுரத்தை சேர்ந்தவர் பொன்னழகு மகன் சரவணகுமார் (வயது 18). இவரது நண்பர் நல்லதம்பி மகன் சரவணகுமார் (23). இவர்கள் இருவரும் வதுவார்பட்டி நென்மேனி ரோட்டில் மின்சார அலுவலகத்தின் அருகில் ஓரத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த சாலையில் வதுவார்பட்டியில் இருந்து நென்மேனி நோக்கி வந்த அடையாளம் தெரியாத கார் இவர்கள் 2 பேர் மீதும் மோதியது. இதில் பொன்னழகு மகன் சரவணகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் பலத்த காயமடைந்த நல்லதம்பி மகன் சரவணகுமாரை மீட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து இருக்கன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.