கார் மோதி வாலிபர் பலி

கார் மோதி வாலிபர் பலி;

Update: 2022-07-11 19:36 GMT

மேலூர்

பேரையூர் அருகிலுள்ள எழுமலையை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 32). இவர் மேலூர் அருகே வெள்ளரிப்பட்டியில் உள்ள ஒரு ரப்பர் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். அங்கு இரவில் வேலை முடிந்து வெள்ளரிப்பட்டி நான்கு வழி சாலையில் நடந்து வந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார், வினோத்குமார் மீது மோதியது. இதில் வினோத்குமார் படுகாயமடைந்து அதே இடத்தில் இறந்தார். இந்த விபத்து குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாளையங்கோட்டையை சேர்ந்த கார் டிரைவர் சுந்தர்(23) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்