இளவட்டக் கல் விழுந்து வாலிபர் பலி... பொங்கல் விழாவில் சோகம்
காணும் பொங்கல் விழாவையொட்டி நேற்று இளவட்டக் கல்லை தூக்கும் போட்டி நடைபெற்றது.;
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சேதுநாடு கிராமத்தில் காணும் பொங்கல் விழாவையொட்டி நேற்று இளவட்டக் கல்லை தூக்கும் போட்டி நடைபெற்றது.
அப்போது அதே கிராமத்தை சேர்ந்த பிரபு(வயது 29) என்பவர் இளவட்டக் கல்லை தூக்க முயன்றபோது எதிர்பாராத விதமாக தவறி கல்லுடன் கீழே விழுந்தார். இதில் அவரின் தலைப்பகுதியில் கல் விழுந்தது.
உடனே, அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.
பொங்கல் விழாவில் இளவட்டக் கல் விழுந்து வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து திருநாவலுார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.