காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-08-24 12:22 GMT

திருவொற்றியூர் ராஜாஜி நகர், கக்கன் தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் செல்வநாதன் (வயது 24). இவர், எண்ணூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். செல்வநாதன் தனது மாமன் மகளை காதலித்து வந்ததாகவும், அவரையே திருமணம் செய்து கொள்ள விரும்பியதாகவும் தெரிகிறது. ஆனால் அவரது காதலுக்கு அவருடைய பெற்றோர் எதிர்ப்பு ெதரிவித்தனர். இதனால் மனம் உடைந்த செல்வநாதன், வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி சாத்தங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்