கொட்டாம்பட்டி,
கொட்டாம்பட்டி அருகே உள்ள மங்களாம்பட்டியை சேர்ந்த காமராஜ் மகன் அழகேசன் (வயது 20). இவரும், அதே ஊரை சேர்ந்த அருண்குமார், சந்தோஷ் ஆகியோரும் மோட்டார்சைக்கிளில் சென்றனர். அய்யாபட்டி விலக்கு அருகே சென்றபோது அங்கு சாலையோரத்தில் நின்ற பெருமாள் (66) என்பவர் மீது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அதில் அழகேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கமலமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.