டிராக்டரில் இருந்து விழுந்து வாலிபர் பலி

நாங்குநேரி அருகே டிராக்டரில் இருந்து விழுந்து வாலிபர் பலியானார்.

Update: 2023-02-11 19:15 GMT

நாங்குநேரி அருகே உள்ள கரந்தாநேரியை சேர்ந்தவர் மாரிகனி. இவருடைய மகன் கணேசன் (வயது 18). இவர் டிராக்டரில் உதவியாளராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நாங்குநேரியில் இருந்து தாழையூத்து நோக்கி டிராக்டரில் கணேசன் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவர் மீது பின்னால் இணைக்கப்பட்டு இருந்த டிரைலர் சக்கரம் ஏறி நசுக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த கணேசன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்