மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வாலிபர் சாவு

மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-10-19 18:07 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பஜார் பகுதியை சேர்ந்த திலீப்குமார் (வயது 23). பழனிபேட்டை சோமசுந்தரம் நகர் பகுதியை சேர்ந்த தட்சணாமூர்த்தி (22). இருவரும் மோட்டார் சைக்கிளில் அரக்கோணம்-திருவள்ளூர் ரோட்டில் சென்ற போது திடீரென நிலைத்தடுமாறி கீழே விழுந்தனர்.

இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி திலீப்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். தட்சணாமூர்த்தி மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்