அம்பை:
வீரவநல்லூர் அருகே உள்ள காருக்குறிச்சியை சேர்ந்த செல்லப்பா மகன் கோவிந்தராஜா (வயது 24). இவர் தனது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த மனோ (26) என்பவருடன் அம்பையில் சினிமா தியேட்டருக்கு படம் பார்க்க சென்றார். பின்னர் இரவில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர்.
அம்பை- கல்லிடைக்குறிச்சி மெயின் ரோட்டில் வந்த போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திேலயே கோவிந்தராஜா பலியானார். மனோ படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அம்பை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மனோவை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.