வாகனம் மோதி வாலிபர் சாவு

வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்தார்.;

Update: 2023-08-18 21:02 GMT


மதுரை சிந்தாமணி மெயின் ரோடு மேல அனுப்பானடி சந்திப்பில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இறந்து கிடந்தார். இந்த தகவல் அறிந்ததும், அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் சிவராமன் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார், இறந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்றும் அவர் மீது மோதிய வாகனம் எது? வாகனத்தை ஓட்டி சென்ற டிரைவர் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி அவர்களை தேடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்