லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி

லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார்.;

Update: 2022-09-30 12:48 GMT

பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு கிராமத்தில் வசிப்பவர் ரகுபதி (வயது 30). திருமணமாகாத இவர், நேற்று முன்தினம் மாலையில் மோட்டார் சைக்கிளில் தேரடி தெருவில் சென்று கொண்டிருந்த போது, வழியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் கதவு திடீரென திறக்கப்பட்டதால் ரகுபதி கதவின் மீது மோதி தடுமாறி கீழே விழுந்தார். அப்போது எதிரே வந்த லாரி சக்கரம் ரகுபதி மீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக பலியானார். சம்பவ இடத்திற்கு சென்ற பொன்னேரி போலீசார் ரகுபதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்