வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை

தூத்துக்குடி முத்தையாபுரம் அருகே வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-06-18 18:45 GMT

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் ஜே.எஸ். நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகன் ஜான் டேனியல் (வயது 20). இவர் டிப்ளமோ முடித்து கோயம்புத்தூரில் வேலை பார்த்து வந்தார். அந்த வேலை பிடிக்காத காரணத்தினால் வீட்டிற்கு திரும்பி வந்து விட்டார். இதனால் மன உளைச்சலில் அவர் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்