மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை
மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.;
மதுரை வண்டியூர் சங்குநகர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 32). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். இதனால் பிரகாஷ் மனவருத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த பிரகாஷ் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.