வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.;

Update: 2023-10-06 18:58 GMT

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டியை சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது 30). இவர் கரூர் மாவட்டம், தோகைமலை அருகே ஆர்ச்சம்பட்டியில் உள்ள கோழிப்பண்ணையில் கூலி வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் கணேஷ்குமார் கருத்துவேறுபாடு காரணமாக தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட கணேஷ்குமார் நேற்று முன்தினம் கோழிப்பண்ணையில் தூக்கில் தொங்கினார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கணேஷ்குமார் பரிதாபமாக இறந்தார். இந்த தற்கொலை சம்பவம் குறித்து கணேஷ்குமாரின் தாய் லட்சுமி கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்