காதல் தோல்வியால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
ஆரல்வாய்மொழி அருகே காதல் தோல்வியால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி அருகே காதல் தோல்வியால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
இளம்பெண்ணுடன் காதல்
தெங்கம்புதூர் அருகே உள்ள பொட்டல்விளையை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மகன் பிரகாஷ் (வயது 32). இவர் அகஸ்தீஸ்வரத்தில் உள்ள ஒரு மரப்பட்டறையில் வேலை செய்து வந்தார்.
இதற்கு முன்பு பிரகாஷ் சென்னையில் ேவலை செய்தார். அப்போது, அங்கு ேவலை பார்த்து வந்த வெள்ளமடத்ைத சேர்ந்த இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர்.
தோல்வி
பின்னர், இருவரும் ஊருக்கு வந்த பின்னும் செல்போன் மூலம் பேசி தங்களது காதலை வளர்த்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு அந்த இளம்பெண் பிரகாசை காதலிக்கவில்லை என்று கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரகாஷ், தனது காதல் தோல்வியடைந்ததால் கடந்த சில நாட்களாகவே மனமுடைந்த நிலையில் காணப்பட்டார்.
தற்கொலை
இந்தநிலையில் சம்பவத்தன்று பிரகாஷ், வெள்ளமடம் சந்திப்பில் வைத்து விஷம் குடித்து விட்டு கோட்டார் போலீஸ் நிலையத்துக்கு சென்று கூறினார். அதைத்தொடர்ந்து போலீசார் அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை பிரகாஷ் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காதல் தோல்வியால் வாலிபர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.